அறுகம் குடா பாதுகாப்பு எச்சரிக்கையை மீளப்பெறுமாறு அமெரிக்காவிடம் கோரியுள்ள இலங்கை
முன்னதாக மறு அறிவித்தல் வரை அறுகம் குடா (Arugam Bay) பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளுக்கு வழங்கிய பயண ஆலோசனையை மீளப் பெறுமாறு அமெரிக்கத் தூதரகத்திடம் கோரியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அறுகம் குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் தங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் கடந்த அக்டோபர் 23 ஆம் திகதியன்று எச்சரிக்கையை வெளியிட்டது.
உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
இந்த அச்சுறுத்தல் காரணமாக, மறு அறிவித்தல் வரை அறுகம் குடா பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு அமெரிக்கத் தூதரகம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில், தற்போது குறித்த பகுதியில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பயண ஆலோசனையை மீளப்பெறுமாறு கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
