கொழும்பின் புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ சிப்பாய்
பாணந்துறையில் தகாத உறவின் அடிப்படையில் அரச சட்டத்தரணி ஒருவரை கத்தியால் குத்திய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் பெண் சட்டத்தரணியுடன் சில காலமாக தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர் அண்மைக்காலமாக அவரைத் தவிர்த்துள்ளார். இதனால் பாணந்துறை ரயிலில் இருந்து நேற்று வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது முதுகிலும் கையிலும் மூன்று தடவைகள் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசாரணை
சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கடமையாற்றிய போக்குவரத்து உத்தியோகத்தர் ஒருவருக்கும் சிறு வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த சட்டத்தரணி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை பாணந்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய, தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கர நாவுல்லா தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.