இளைஞர், யுவதிகள் ரணில் ராஜபக்சவையும் இந்த அரசாங்கத்தையும் கட்டாயம் விரட்டியடிப்பார்கள்: எரங்க குணசேகர

Ranil Wickremesinghe Janatha Vimukthi Peramuna Sri Lanka Anti-Govt Protest
By Dilshan Dk Aug 23, 2022 12:50 PM GMT
Report

நாட்டின் இளைஞர், யுவதிகள் ரணில் ராஜபக்சவையும் இந்த அரசாங்கத்தையும் கட்டாயம் விரட்டியடிப்பார்கள் எனவும் அதனை சட்டங்களால் தடுத்து நிறுத்த முடியாது என எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு எதிராக இன்று மருதானை சி.எஸ்.ஆர் மண்டபத்தில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் ஒரு குழுவினரால் ஊடகசந்திப்பொன்று நடைபெற்றது.

இவ் ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,


“ரணில் ராஜபக்ச முன்னெடுத்து வரும் அடக்குமுறைக்கு எதிராக கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினோம்.

நான் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டேன். வங்கி கொள்ளையில் ஈடுபட்டு மிகப் பெரிய குற்றத்தை செய்தது போல் சுற்றிவளைத்து என்னை கைது செய்ய பொலிஸார் தேடினர்.

தோழர் வட்டகல கூறியது போல் நான்கு, ஐந்து முறை வீட்டுக்கு வந்தனர். அயல் வீடுகளில் உள்ளவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

சட்டங்களுக்குள் புகுந்து எங்களை அச்சுறுத்த முயற்சிப்பார்கள் என்றால் அது வெறும் கேலி கூத்தாகவே இருக்கும் என்பதை ரணில் விக்ரமசிங்கவுக்கு கூறி வைக்கின்றோம்.

ரணிலுக்கு மக்களின் ஆணையில்லை

இளைஞர், யுவதிகள் ரணில் ராஜபக்சவையும் இந்த அரசாங்கத்தையும் கட்டாயம் விரட்டியடிப்பார்கள்: எரங்க குணசேகர | Sri Lanka Anti Govt Protest Today

ரணிலுக்கு மக்களின் ஆணையில்லை. மக்களின் ஆதரவுமில்லை. மக்களின் பலமும் இல்லை. அவருக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியும்.

நாட்டின் இளைஞர், யுவதிகள் ரணில் ராஜபக்சவையும் இந்த அரசாங்கத்தையும் கட்டாயம் விரட்டிப்பார்கள். அதனை சட்டங்களால் தடுத்து நிறுத்த முடியாது.

எங்களை கைது செய்து, வசந்தவை கைது செய்து, ஏனையோரை கைது செய்தாலும் அவர்களுக்கு ஏற்பட வேண்டிய நிலைமை கட்டாயம் ஏற்படும்.அது ஜனநாயக ரீதியாக நடக்கும்.

இதனால், எம்மை அச்சுறுத்த முடியாது என்பது எமக்கு தெரியும். நான் அறிந்த வரை எனக்கு எதிராக எந்த பிடியாணையும் இல்லை.

ரணிலையும் இந்த அரசாங்கத்தையும் விரட்டியடிப்போம்

இளைஞர், யுவதிகள் ரணில் ராஜபக்சவையும் இந்த அரசாங்கத்தையும் கட்டாயம் விரட்டியடிப்பார்கள்: எரங்க குணசேகர | Sri Lanka Anti Govt Protest Today

சட்டத்தை புறந்தள்ளி விட்டுச் செல்லவும் நாங்கள் முயற்சிக்க மாட்டோம். நாங்கள் பகிரங்கமாக பணியாற்றுவோம். அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்யட்டும்.

நாங்கள் ஜனநாயக வழியில் மோதுவோம். ரணிலையும் இந்த அரசாங்கத்தையும் விரட்டியடிப்பதை நிறுத்த மாட்டோம். கட்டாயம் நாங்கள் அதனை செய்வோம்.

நாங்கள் போராட்டம் நடத்துவோம். அனைவருடனும் தலையீடுகளை மேற்கொள்வோம். ரணிலிடம் இருக்கும் சிறிய விளையாட்டுக்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்”என்றார். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US