இரும்பு கம்பிகளுடன் ஆர்பாட்டக்களத்திற்கு இராணுவ உடையில் வந்தவர்கள் யார்! இராணுவப் பேச்சாளர் (Video)
இலங்கை இராணுவத்தினர் இரும்பு கம்பிகளை வைத்திருப்பது போன்று சமூக ஊடங்களில் வெளிவந்த நிழல் படங்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய தனிப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கடந்த 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இராணுவத்தினர் இரும்பு கம்பிகளை வைத்திருந்ததாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து பலரும் தமது கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்த நிலையில், இதனை மறுத்த இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இராணுவத்தினர் எவரும் இரும்பு கம்பிகளுடன் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு செல்லவில்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எமது செய்திச்சேவை வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,