எதிர்வரும் 15 ஆம் திகதி நாடு முடங்கும்: கொழும்பில் ஆர்ப்பாட்டக்களத்திலிருந்து எச்சரிக்கை (Live)
கொழும்பு - புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (09.03.2023) முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது `` எதிர்வரும் 15 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் இலங்கை முடங்கும் '' என ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் சாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
''செலுத்த முடியாது, மின் கட்டணத்தை திரும்ப பெறு'' எனும் தொனிப்பொருளில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அனைத்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (09.03.2023) கொழும்பு - புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் ஆர்ப்பாட்ட பேரணியை தடுப்பதற்காக பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆசிரிய சங்கத்தை சேர்ந்த ஜோசப் சாலின் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் உறுப்பினர்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.