கொழும்பில் தொடரும் பதற்றம்: போராட்டக்காரர்களின் கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த கலகத்தடுப்பு படைவீரர் (live)
கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலகத்தடுப்பு பிரிவினரின் தாக்குதலை தொடர்ந்து போராட்டக்காரர்களும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது கலகத்தடுப்பு படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏழாம் இணைப்பு
கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் போது பாதுகாப்பு கருதி போராட்டக்காரர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்கள் மீது கலகத்தடுப்பு பிரிவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆறாம் இணைப்பு
கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் போது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐந்தாம் இணைப்பு
அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தற்போது கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென திட்டமிட்டு இந்த போராட்டம் சேனாநாயக்க வீதியூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நான்காம் இணைப்பு
கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்துள்ளனர்.
குறித்த இடத்திலிருந்தே இன்று (07.03.2023) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் இணைப்பு
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் ஒன்றுகூடிய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அனைவரும் பேருந்துகளில் லிப்டன் சுற்றுவட்டத்தை நோக்கி செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
புறக்கோட்டை பகுதியில் போராட்டதில் ஈடுபடுவதற்காக ஒன்றுகூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் வசந்த முதலிகே உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை பொலிஸார் வாசித்து காட்டியுள்ளனர்.
இதன்போது வீதியை மறிக்காது போராட்டத்தில் ஈடுபடுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் அரசாங்கத்துக்கு எதிராக கண்டனப் போராட்டம்
ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டத்தை அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர் இன்று (07.03.2023) மேற்கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் ஏராளமான பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.