போராட்டக்குழுவுக்கு அரச தரப்பில் இருந்து வந்த எச்சரிக்கை! செய்திகளின் தொகுப்பு(Video)
போராட்டக்காரர்கள் வீடுகளுக்கு தீ வைத்து, மக்களைக் கொல்ல வந்தால், அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அடித்துக் கொன்று அரசாங்கத்தை கவிழ்ப்பதை அனுமதிக்க முடியாது எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அமைதியான போராட்டங்களை எந்த நேரத்திலும் செவிசாய்க்க அரசு தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மகனை கட்சிக்கு அழைத்து வரும் திட்டத்தில் இருக்கிறார்.
அவர் காலத்தில்தான் நாடு அதிக கடன் வாங்கியது. அதை மறைப்பதற்காகவே பல விடயங்கள் கூறப்படுகின்றன. ஆனால் இந்த சவால்களை சமாளிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
You may like this video