சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டை பெற்ற இலங்கை!
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கும் கடினமான வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கைத் தலைமை வெளிப்படுத்திய அரசியல் விருப்பத்தை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த சுப்ரமணியன், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணப் பொதிக்கான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்காக துடுப்பெடுத்தாடும் இந்தியா
இந்தநிலையில் முக்கிய கடன் வழங்கும் நாடுகளின் இறுதி உறுதிமொழிகள் நிறைவடைந்த தருணத்தில், செயல்முறை இறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திப்பின் பின்னர் கருத்துரைத்துள்ள 2018 முதல் 2021 வரை இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த கிருஸ்ணமூர்த்தி சுப்ரமணியன், நாங்கள் உங்களுக்காக துடுப்பெடுத்தாடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்படும் போதெல்லாம், நாங்கள் கவர் டிரைவ்களையும் விளையாடுகிறோம் என்று
தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 58 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
