உயர் மட்ட பாதுகாப்பில் இலங்கையின் விமான சேவை
இலங்கையில் விமானப் பாதுகாப்பை மிக உயர்ந்த மட்டத்தில் பேணுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பினால் நடத்தப்பட்ட விமானப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கணக்காய்வின் மூலம் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையைப் போலவே இலங்கையின் வான்வெளியும் மிகவும் பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இந்த சர்வதேச கணக்காய்வு முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்று இந்நிகழ்வில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri