இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறும் மலேரியா - விமான நிலையத்தில் பாதுகாப்பு
தற்போதைய நிலவரப்படி இலங்கையில் மலேரியா நோய் இல்லை என தேசிய மலேரியா நோய் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் திருமதி சம்பா அலுத்தவீர தெரிவித்துள்ளார்.
எனினும் மலேரியா நோயுள்ள நாட்டிலிருந்து யாராவது ஒரு நபர் அந்த தொற்றுடன் இலங்கைக்குள் வந்தால் இந்த நோய் மீண்டும் உருவாகலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
நைஜீரியா, தன்சானியா போன்ற நாடுகளில் மலேரியா நோயாளர்கள் காணப்படுகின்றனர்.
இரத்த பரிசோதனை மூலம் இந்த நோயை இனங்கண்டு கொள்ள முடியும். இதற்கு தேவையான வசதிகளை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.
நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள மலேரியா தடுப்பு தலைமையகத்திலும் வைத்தியசாலைகளின் சிகிச்சை பிரிவுகளிலும் இதற்கான வசதி காணப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலும் இதற்காக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலக மலேரியா தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இந்தத் தகவலை வைத்தியர் வெளியிட்டுள்ளார்.
மலேரியா அற்ற இலங்கைக்காக ஆபத்துமிக்க குழுவினருக்கு தெளிவுபடுத்தல் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
May you like this Video