சீன நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த இலங்கையின் அரச நிறுவனம்
15 ஆண்டுகளுக்கு முன்னர் திறக்கப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவ - தொடங்கொட பகுதியை நிர்மாணிப்பதற்காக சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கோர்ப்பரேசனுக்கு பில்லியன் கணக்கான ரூபாய் நிலுவையை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிராகரித்துள்ளது.
2011இல் திறக்கப்பட்ட 35 கிலோ மீற்றர் நீளமான இந்த வீதிப் பகுதிக்கு செலுத்தப்படாத பணம் என்று வலியுறுத்தும் 7.91 பில்லியனுக்கான கோரிக்கை கடிதத்தை சீன நிறுவனம், வீதி அதிகார அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுப்பியுள்ளது.
நிர்வாக நடைமுறை
அத்துடன், பணம் செலுத்துவதற்கான காலக்கெ 2025 மார்ச் 31ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்ற அடிப்படையில் கோரிக்கையை நிராகரித்து, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இயக்குநர், குறித்த சீன நிறுவனத்துக்கு பதில் அனுப்பியுள்ளார்.
அதேநேரம், இந்த நீடித்த சர்ச்சை குறித்து அதிகாரசபை இப்போது தலைவர் அநுர குமார திசாநாயக்கவிடம் தெரிவித்து குற்றவியல் விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த சீன நிறுவனம், நிலையான ஒப்பந்த நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற அடிப்படையிலேயே இந்த நிலுவை நிராகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |