கண்டி நகருக்கு படையெடுத்த மில்லியன் கணக்கான பக்தர்கள்
புனித தலதா கண்காட்சியை முன்னிட்டு மில்லியன் கணக்கான பக்தர்கள் கண்டி நகருக்கு வருகைத்தந்துள்ளதாக கூறப்படுகிறது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த நிகழ்வு ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்று வரும் நிலையில் மக்கள் வரிசை 2கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
புத்தரின் புனித தந்த தாதுவை வணங்குவதற்காக இலட்சக்கணக்கான பக்தர்கள் தலதா மாளிகையை நோக்கி படையெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள்
வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரில் இடம்பெறும் இந்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி பத்து நாட்கள் இடம்பெறவுள்ளது.
நாடு முழுவதிலுமிருந்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என்று அதிகாரிகள் எதிர்க்கப்பட்ட நிலையில் இதுவரை இல்லாத அளவு மக்கள் திரண்டுள்ளதாக கூறப்படுகிறது.