இலங்கை - அபுதாபி இணைக்கும் நேரடி விமான சேவை விரைவில்
இலங்கையையும் - அபுதாபியையும் இணைக்கும் வகையில் புதிய விமான சேவைகளை ஏர் அரேபியா அபுதாபி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விமான சேவை திட்டம் அடுத்த வருடம் (2024) ஜனவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபி விமான நிலையத்திற்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குறித்த விமான சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் அரேபியா நிறுவனம்
மேலும், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஏர் அரேபியாவின் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடெல் அல் அலி,
“அபுதாபியிலிருந்து நேரடி விமானங்கள் மூலம் கொழும்பை எங்களின் வளர்ந்து வரும் வலையமைப்பில் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
ஏர் அரேபியா அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பயண மற்றும் சுற்றுலாத் தொழில்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே வேளையில், பல இடங்களுடனான தலைநகரின் இணைப்பை மேலும் வலுப்படுத்த உதவும்.” எனஅவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |