சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!
சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த நாடுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல மற்றும் செல்வாக்கு மிக்க சஞ்சிகையான கொன்டே நாட் ட்ரவலர்ஸ் வாசகர்களின் தெரிவுகளின்படி சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த நாடுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.
வாசகர்களின் தெரிவுகளின்படி, போர்த்துக்கல், ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகியவை பயணிகளுக்கான முதல் மூன்று இடங்களாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
தரவரிசையில் இலங்கை
இந்த தரவரிசையில் சுற்றுலாப் பயணிகளுக்கான முதல் 20 இடங்களுக்குள் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய பயணிகளுக்கான சிறந்த நாடாக இலங்கை 17 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இதேவேளை இஸ்ரேல், துருக்கி மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளை விட இலங்கை, இந்த தரப்படுத்தலில் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
