சக்தியின் பல்வேறு மூர்த்தங்களை போற்றும் வசந்த நவராத்திரி விழா
லண்டன் கிழக்கில் அருளாட்சி செய்யும் வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயத்தில் பரிவாரமூர்த்தியாக வீற்றிருந்து அருள்புரியும் மீனாட்சி அம்மன், தீப துர்க்கா, ராஜராஜேஸ்வரி ஆகிய சாக்த மூர்த்தங்களின் அருள் வேண்டி ஒவ்வொரு வருடமும் வசந்த நவராத்திரி விழா அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இவ்விழா அலங்காரத் திருவிழாவாக கடந்த இருபது வருடங்களாக நடைபெற்று வருகின்றது. முதன்முதலில் ஐரோப்பிய நாட்டில் இரவுத் தேர் சந்திர ரதமாக நகர் வீதிவலம் வந்த பெருமைக்கு உரியது. பங்குனி அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஸ்ரீ ராமநவமியை முடிவாகக் கொண்டு இவ்விழா நடைபெற்று வருகிறது.
பங்குனி அமாவாசைக்குப் பிறகு சாந்திரமானப்படி சைத்திரசுத்தம் என்பார்கள். இது வசந்த கால ஆரம்பமாகவும் கைக்கொள்ளப்படும். இதனால் வசந்த நவராத்திரி என அழைக்கப்படும். வசந்த காலத்தில் பருவநிலை மாற்றம் மேலும் வெளிநாடுகளில் நேர மாற்றம் எனப் பல மாறுதல்களைக் காணலாம்.
பூக்கள், பழங்கள் பல மலரும் காலம். பறவைகள் மகிழும் காலம். இயற்கை அனைத்திற்கும் சக்திதான் காரணம் என்ற வகையில் சக்தியின் பல்வேறு மூர்த்தங்களை போற்றும் வழிபாடாக இது அமைகிறது.
ராஜராஜேஸ்வரி, அபிராமி, கேதார கௌரி, சந்தான லட்சுமி, சரஸ்வதி, துர்கா, மீனாட்சி எனப் பல்வேறு தர்சனக் காட்சியாக அம்பிகை வழிபட்டு அருள்பெறும் காலமாகும்.
இம்முறை எமது ஆலயத்தில் 30.03.2023 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் மூலஸ்தானப் பிள்ளையார் பூஜையுடன் ஆரம்பித்து வசந்த மண்டபப் பூஜை 6 மணியளவில் இடம்பெற்று நவசக்தி அருட்சனை நடைபெறும்.
இரவு 7 மணியளவில் ஆலயத்தைச் சூழவுள்ள வீதியில் அம்பாள் அலங்கார தேரில் சந்திர ரதத்தில் அமர்ந்து வீதி வலம் வரும் அருட்காட்சி இடம்பெறும்.
இவ்வாண்டு இருபதாம் ஆண்டு சந்திர ரதமாக நடைபெறும் இக்காட்சியில் அனைவரும் பங்கு கொண்டு அருள்பெற்று உய்யும் வண்ணம் வேண்டுவதாக நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். 
 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        