வரலாற்று சாதனையுடன் வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ்

Mumbai Indians Sunrisers Hyderabad IPL 2024
By Dev Mar 27, 2024 10:00 PM GMT
Report

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நாணயசுழற்சியில் வெற்றிபெற்று பந்துவீச்சை மும்பை அணி தெரிவுசெய்தது. அதனையடுத்து துடுப்பாடிய சன்ரைசர்ஸ் அணி 277 ஓட்டங்கள் குவித்தது.

பதிலுக்கு 278 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 246 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

வரலாற்று சாதனையுடன் வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ் | Srh Vs Mi Live Update

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக சிக்ஸ் அடிக்கப்பட்டது.

ஒரே போட்டியில் மிக அதிக சிக்ஸ் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் அடிக்கப்பட்ட சாதனையாக இந்த போட்டி அமைந்துள்ளது.

இந்தப் போட்டியில் மொத்தம் 38 சிக்ஸ் அடிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் 523 ஓட்டங்கள் குவிக்கப்பட்டதும் ஐபிஎல் வரலாற்றில் மிகப் பெரிய சாதனை ஆகும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 277 ஓட்டங்கள் குவித்த நிலையில், அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 246 ஓட்டங்கள் குவித்தது.

வரலாற்று சாதனையுடன் வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ் | Srh Vs Mi Live Update

முதலாம் இணைப்பு

நடைபெற்றுவரும் 17ஆவது ஐபிஎல் தொடரின் எட்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன.

குறித்த போட்டியானது, இன்றையதினம் (27.03.2024) ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறுகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விதிமுறையை மீறிய சுப்மன் கில்

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விதிமுறையை மீறிய சுப்மன் கில்

முதலாவது வெற்றி

அத்துடன், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தத்தமது முதலாவது போட்டிகளில் முறையே கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளிடம் தோல்வியடைந்துள்ளன.

வரலாற்று சாதனையுடன் வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ் | Srh Vs Mi Live Update

எனவே, தமது முதலாவது வெற்றியை பெரும் நோக்கில் இரு அணிகளும் இன்றையதினம் களமிறங்கியுள்ளன. 

கிரிக்கெட் இரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இரு இலங்கை வீரர்கள்!

கிரிக்கெட் இரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இரு இலங்கை வீரர்கள்!

2-வது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி

2-வது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US