சுமந்திரன் - சிறிதரன் கருத்து தொடர்பில் அரசியல் குழுவில் ஆராயப்படும்! மாவை
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களினால் அனுப்பப்பட்ட கடிதம் எனது மின் அஞ்சலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களினால் அனுப்பப்பட்டிருந்தது.
அதில் விடுதலைப்புலிகளின் போர்க் குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்றிருந்தமையால் நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் ஐ.நாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் விடுதலைப்புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்று கோரப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
எனவே இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மாவை சேனாதிராஜா அவர்களை இன்று (11)தொடர்பு கொண்டு விடயம் தொடர்பில் தங்கள் கட்சிக்குள் இருக்கும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம காலத்தில் இருவேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .
இதில் யாருடைய கருத்து உண்மையானது எனக் கேட்டப்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்களின் கருத்து தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை, அது தொடர்பில் நான் ஆராய்ந்துவிட்டே கூறுகிறேன்.
அனால் நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகளை விசாரிக்க வேண்டும் என்று கோரவில்லை. இதுதான் உண்மை.நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவ்வாறு கூறியிருந்தால் அது தொடர்பில் கட்சியின் அரசியல் குழுவில் ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
