சிங்கள மக்களுக்கு ஒரு நீதி, தமிழர்களுக்கு இன்னொரு வகையான நீதியா? சபையில் சிறீதரன் எம்.பி ஆதங்கம்
அகழ்வாராய்ச்சி என்ற பெயரிலே தமிழர்களுடைய நிலங்களை அபகரிப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் கட்டளையை மீறி அமைச்சரொருவர் பட்டாள ஆராவாரங்களுடன் சென்று அகழ்வாராய்ச்சி தொடங்குவதற்கான நடவடிக்கையை செய்துள்ளார். இந்த நாட்டினுடைய நீதித்துறை நியாயமாக நடக்கிறதா?
சிங்கள மக்களுக்கு ஒரு நீதி, சிங்கள தலைவர்களுக்கு ஒரு நீதி, தமிழ் மக்கள் வாழ்கின்ற இடங்களிலே அவர்களின் நிலங்களை பறிப்பதற்கும், தமிழ் மக்களுக்கும் இன்னொரு வகையான நீதியா?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை கொன்றவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மிருசுவில் படுகொலையில் ஈடுபட்டவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமல் இன்னும் சிறையிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.