மத்திய கிழக்கை மாற்ற இஸ்ரேலின் சதித் திட்டம்: கத்தார் முன்னாள் பிரதமர் பகீர் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் தற்போது நிகழும் போர் என்பது தற்செயலானது அல்ல.அது வன்முறை மூலம் ஒட்டுமொத்த பிராந்தியத்தையுமே மாற்றி அமைப்பதற்கான இஸ்ரேலின் நீண்டகால சதித்திட்டம் என்று கத்தாரின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹமத் பின் ஜாசிம் அல் தானி தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், தற்போதைய புவிசார் அரசியல் மாற்றங்கள் குறித்து அவர் மிகக் கடுமையான எச்சரிக்கைகளை முன்வைத்தார்.
ஹோர்முஸ் நீரிணை
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே இந்தப் போரின் மிக மோசமான விளைவு என்று குறிப்பிட்ட அவர், நெதன்யாகுவின் "பெரிய இஸ்ரேல்" கனவு பிராந்திய அமைதிக்கே உலை வைக்கும் எனச் சாடினார்.

இந்த பேராபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள வளைகுடா நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உடனடியாக ஒரு 'கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை' உருவாக்க வேண்டியது கட்டாயம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan