ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இலங்கையுடன் இணைந்து தயாரிக்கும் முயற்சியில் ரஷ்யா
இலங்கையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை இணைந்து தயாரிக்கும் திட்டம் தொடர்பில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி விக்டோரோவிச் லாவ்ரோவ், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடியுள்ளார் என தெரிவித்தார்.
தொலைபேசியின் ஊடாக இந்த உரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதில் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இதன்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இலங்கையுடன் இணைந்து தயாரிக்கும் முயற்சியில் ரஷ்யா முழு ஒத்துழைப்புடன் செயற்படும் என ரஷ்ய அமைச்சர் கோரியதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கான செயல்முறையை விரைவுபடுத்துமாறு அவர் இலங்கை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.
இதேவேளை உறுதியளித்தபடி இலங்கைக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி வழங்கப்படும் என ரஷ்ய அமைச்சர் உறுதியளித்ததாக அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.
இதற்கிடையில் நிலைமை இயல்புக்கு திரும்பியவுடன் ரஷ்யா தனது சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்ப ஆர்வமாக உள்ளது என்றும் ரஷ்ய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri