ஸ்புட்னிக் தடுப்பூசியின் ஒரு டோஸ் போதுமானது - வெளிப்படுத்தப்படும் மாறுபட்ட கருத்துக்கள்

Corona Virus Corona Vaccine Covid - 19
By Mayuri Jun 02, 2021 09:17 AM GMT
Report

ஸ்புட்னிக் - 5 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களில் முதலாவது டோஸில் மாத்திரம், திருப்தியடைய முடியும் என ரஷ்யாவின் உற்பத்தி நிறுவனம் மற்றும் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளதாக, இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.

ஆகவே நிறுவனம் அளித்த உத்தரவாதத்திற்கு அமைய, ஒரு டோஸை மாத்திரம் திருப்தியடைய தீர்மானித்ததாகவும், எனினும் தற்போது வரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் - 5 தடுப்பூசிகளை ஒரு முறை மாத்திரம் வழங்குவது போதுமானதாகும் என தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்டமாக ஒரு தடுப்பூசியை மாத்திரம் வழங்குவதில் திருப்தியடைய முடியும் என குறித்த தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தின் ஆய்வகம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதற்கமைய ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தினால் இரண்டு தடுப்பூசிகளில் முதலாம் கட்டமாக வழங்கப்படும் தடுப்பூசியை 'ஸ்புட்னிக் லைட்' என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தினால் எமக்கு அறிவித்தலொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே இது எம்மால் தீர்மானிக்கப்படும் விடயமல்ல எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் கோவிட் தடுப்பூசியான ஸ்புட்னிக் - 5 மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை கண்டியில் முதற்கட்டமாக நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, கோவிட் தடுப்பூசியை முதல் முறை மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் பத்திரம் ஒன்று தடுப்பூசி அளிக்கப்படும் இடங்களில் அதிகாரிகளால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த பத்திரத்தில் அதிலுள்ள முதலாவது தடுப்பூசி மாத்திரம் என்ற நிபந்தனையை அழித்துவிட்டு இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுத்தர வேண்டும் என பொது மக்கள் எழுதியதால் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

ஸ்புட்னிக் - 5 முதலாவது தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கு விருப்பம் தெரிவிப்பதாக மக்களிடம் கையொப்பம் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு நேற்றும் கண்டியில் இடம்பெற்றது.

இந்த சர்ச்சை நீள்கின்ற நிலையில், நேற்றைய தினம், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் இது தொடர்பில் வினவப்பட்டது.

நிபுணத்துவ வைத்திய ஆலோசனைக்கு அமையவே அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் நிலைமையை அவதானித்தே ஒரு தடுப்பூசியேனும் போதுமானது என தீர்மானிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சத்திரசிகிச்சையொன்றுக்கு சென்றாலும் கையொப்பமிட வேண்டுமெனவும், அவ்வாறே தகவல்கள் அடங்கிய ஆவணத்தில் கையொப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, இரண்டு தடுப்பூசிகளைக் கொண்ட ஸ்புட்னிக் - 5 தடுப்பூசிக்கே அனுமதி வழங்கியுள்ளதாக தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவிக்கின்றது.

ஸ்புட்னிக் - 5 முதலாம் தடுப்பூசிக்கு 6.5 மில்லியனும் இரண்டாம் தடுப்பூசிக்கு 6.5 மில்லியனும் செலுத்தி அதனைக் கோரியுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

வேறு தடுப்பூசிகளைப் போன்றல்லாமல் அதன் இரண்டு தடுப்பூசிகளும் வித்தியாசமானவை என அதிகார சபை தெரிவிக்கின்றது.

இதேவேளை, ரஷ்யாவின் ஸ்புட்னிக் - 5 கோவிட் வைரஸ் தடுப்பூசியின் ஒரு டோஸ் மாத்திரம் போதுமான பாதுகாப்பை வழங்குவதாக, அந்த நாட்டின் சுகாதார அமைச்சு கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல்வேறு காரணங்களுக்காக, ஸ்புட்னிக் - 5 இரண்டாவது டோஸைத் தவிர்த்த ரஷ்ய மக்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஸ்பூட்னிக் - 5 முதல் டோஸின் பின்னர், 79.4 சதவிகிதம் பயனுள்ளதாக காணப்பட்டதை சுகாதார அமைச்சு மேற்கோளிட்டுள்ளது. மேலும், இரண்டு டோஸ்களைப் பெற்ற பின்னர் 91.6 சதவிகிதம் பயனுள்ளதாக காணப்பட்டதையும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறெனினும், ஸ்புட்னிக் - 5 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை வழங்கும் செயற்பாட்டை ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகள் பின்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US