இலங்கை இராணுவத்தினால் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள மாபெரும் விளையாட்டு விழா
ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல் மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் எதிர்வரும் 07.04.2024 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள் மட்டுமன்றி இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
முன்னாயத்த கலந்துரையாடல்
இதன் முன்னாயத்த கலந்துரையாடல் நேற்றையதினம் (28) மு.ப 10மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட வைத்தியர்கள், முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |