முல்லைத்தீவில் இடம்பெற்ற விளையாட்டு விருது வழங்கும் விழா
முல்லைத்தீவு (Mullaitivu) கல்வி வலயத்திற்குட்பட்ட தேசிய மற்றும் மாகாண ரீதியான விளையாட்டு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது முல்லைத்தீவு வலயக் கல்வி பணிப்பாளர் இ. தமிழ்மாறன் தலைமையில் நேற்று (03.05.2024) முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
கௌரவிக்கும் நிகழ்வு
வெற்றியீட்டிய மாணவர்கள் பான்ட் வாத்திய அணியினரால் அழைத்துவரப்பட்டதுடன் மங்களச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகண கல்விப் பண்பாட்டலுவர்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சனும் சிறப்பு விருந்தினராக வடமாகண திணைக்கள உதவி கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) இ. இராஜசீலனும் கலந்து சிறப்பித்துள்ளனர்.