மயிலிட்டி துறைமுகம் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ள விடயம்
மயிலிட்டி துறைமுகத்தை முன்னேற்றகரமான துறைமுகமாக மாற்ற வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மயிலிட்டி என்பது வரலாற்று முக்கியமான மீன்பிடித் துறைமுகமாகும், நாட்டில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்த மீன்பிடித்துறைமுகம் காணப்பட்டது. கடந்த 30 வருடங்களாக காணப்பட்ட நிலைமை காரணமாக இந்த துறைமுக நடவடிக்கைகள் செயலிழந்து காணப்பட்டன.
கடல்வளம் பகிர்வதில் முரண்பாடு
இந்த பிரதேசத்தில் காணி, கடற்தொழிலாளர்களின் கடல்வளம் பகிர்வதில் உள்ள முரண்பாடு என பிரச்சினைகள் காணப்பட்டன. எமது கடற்தொழிலாளர்கள் சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை கடைபிடிக்கும் நிலைமையும் காணப்பட்டது.
எமது அரசாங்கம் இந்த அனைத்து நிலைமைகளையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து துறைமுகத்தையும் கடற்துறையையும் சீரான திசையை நோக்கி கொண்டு செல்ல எதிர்பார்க்கிறது. இந்த துறைமுகத்தை முன்னேற்றகரமான துறைமுகமாக மாற்ற வேண்டும்.
உளக்காயங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்பினால் அன்றிவேறு எதனாலும் திருப்திப்படுத்த முடியாது. எந்த அபிவிருத்தி மேற்கொண்டாலும் காணி விடுவித்தாலும் பாதைகளை திறந்த போதும் அவர்களின் 30 வருட கால கசப்பான அனுபவங்களை போக்க வேண்டும் என்பது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.
இந்திய படகுகளை அகற்ற நடவடிக்கை
3ஆம் கட்ட பணிகளை ஆரம்பித்து பூரண துறைமுகமாக இதனை மாற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த துறைமுகம் உங்களுடையது. இதனை நீங்கள் தான் காக்க வேண்டும். எமக்கு தொல்லை கொடுத்து வரும் இந்திய படகுகளை அகற்றவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான படகுகள் எமது நாட்டில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. ஆழ்கடல் மீன்பிடித்துறை ஊடாக கடற்றொழிலை மேம்படுத்த வேண்டும். அதற்கான உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

காருக்குள் 45 நிமிடம் உரையாடிய புடின் - மோடி: அமெரிக்காவின் டிரம்புக்கு உருவாகும் புதிய அழுத்தம்! News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
