2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்வி சீர்திருத்தம்: தீவக கல்வி வலயத்தின் ஆசிரியர்களுக்கு விசேட செயலமர்வு
2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் தீவக கல்வி வலயத்தின் ஆசிரியர்களுக்கு விசேட செயலமர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலமர்வானது இன்றையதினம் (18) தீவக கல்வி வலயத்தால் நடாத்தப்பட்டது.
வெளிக்கள ஆய்வு
உலகச் சுற்றோட்டத்தின் தேவைக்கேற்ப நவீன கல்வி முறையை எமது மாணவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டதற்கு இணங்க, 2026 ஆம் ஆண்டுமுதல் தரம் ஒன்று மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும் பாடத் திட்டத்தின்கேற்ப தீவக கல்வி வலையத்தின் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களின் ஆசிரியர்களுக்காகவே குறித்த செயலமர்வின் வெளிக்கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நில அமைவுகள், சூழலின் அக, புறத் தன்மைகள் மற்றும் தாவரங்களின் இனப் பரம்பல், நீர் நிலைகளின் அவதானிப்புகள் குறித்து ஆசிரியர்களுக்கு கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam