மீண்டும் அதிகரிக்கும் மழை வீழ்ச்சி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் எதிர்வரும் 13ஆம் திகதியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனால் எதிர்வரும் நாட்களில் இலங்கையின் பல பகுதிகளிலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம் காலை 11 மணிக்கு வெளியிடப்பட்ட சிறப்பு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கையின்படி, உருவாகி வரும் இந்த வானிலை அமைப்பு காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும், நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளிலும் மழை அதிகரிக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
முதல் 144 மணிநேரத்திற்குள் இந்த அமைப்பு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

144 முதல் 168 மணிநேரத்திற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இது வலுவடைவதற்கான குறைந்த அளவிலான சாத்தியக்கூறுகள் மட்டுமே காணப்படுகின்றன.
பொதுமக்கள், குறிப்பாக கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வானிலை நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவசியமான மேலதிக அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிடுவோம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan