கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்!பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெராவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01 ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அத்தோடு, குறித்த இரண்டு தினங்களிலும் மாலை 06:30 மணி முதல் பெரஹெரா நிறைவடையும் வரை இந்தப் போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
போக்குவரத்துத் திட்டம்
பெரஹெரா காலப்பகுதியில் பொதுமக்களுக்கும் சாரதிகளுக்கும் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கும் பொருட்டு இந்த விசேட வீதி ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.