கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!
போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
போரா மாநாடு நாளை (25) கொழும்பு கோட்டையில் உள்ள டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
போரா மாநாடு
இந்த மாநாடு, நாளை மற்றும் 27.06.2025 முதல் 05.07.2025 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக ஒரு திரளான கூட்டம் கலந்துகொள்ளவுள்ளதால், விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள கிளென் ஆபர் திசைக்கு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு, காலி வீதியிலிருந்து கிளென் ஆபர் பகுதிக்கு நுழைந்து கடற்கரை வீதிக்கு போக்குவரத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள ஆதமலி பகுதிக்கு வாகன நுழைவு அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
விசேட போக்குவரத்து திட்டம்
அத்துடன், மேற்படி தினங்களில் காலை 7:00 முதல் இரவு 10:00 மணி வரை மருதானை டார்லி வீதி, காமினி சுற்றுவட்டத்திலிருந்து டி.ஆர்.விஜயவர்தன மாவத்தைக்கு கொள்கலன் வாகனங்கள், கல், மணல் ஏற்றப்பட்ட டிப்பர் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் நுழைவு மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, 2025.06.27 முதல் 2025.07.05 வரை காலை 07:00 முதல் காலை 11:30 வரை மற்றும் பிற்பகல் 03:00 முதல் இரவு 10:00 மணி வரையும் பம்பலப்பிட்டி போரா முஸ்லிம் பள்ளிவாசலில் போரா மாநாடு நடைபெறவுள்ளது.
அந்த நாட்களில் வெள்ளவத்தை திசையிலிருந்து கடற்கரை வீதி வழியாக பம்பலப்பிட்டி ஊடாக கொள்ளுப்பிட்டி நோக்கியும், கொள்ளுப்பிட்டியிலிருந்து பம்பலப்பிட்டி ஊடாக வெள்ளவத்தை நோக்கியும் கொள்கலன் வாகனங்கள், கல், மணல் ஏற்றப்பட்ட டிப்பர் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் நுழைவும் மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 13 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
