விசேட போக்குவரத்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு
கிராமங்களுக்கு சென்ற மக்கள் கொழும்பு திரும்புவதற்காக இன்று (15.04.2023) முதல் விசேட தொடருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விசேட தொடருந்து சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட பேருந்து சேவை
இதேவேளை, கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு திரும்புவதற்காக இன்று (15.04.2023) முதல் விசேட பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் இயங்கும் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ண ஹன்சா தெரிவித்துள்ளார்.
மேலும் 10 வீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.



