புகையிரத பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விசேட புகையிரதங்கள் சேவையில்
பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு 9 விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த விடயத்தை புகையிரத திணைக்கள பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்திற்கு விசேட புகையிரதங்கள்
அவர் மேலும் கூறுகையில், இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.

இன்று அதிகாலை 12.40 மற்றும் இரவு 9 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரத்திற்கு 2 விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.
| கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பெருமளவு மக்கள் கூட்டம் (Video) |
நாளை அதிகாலை 3.30 மணி, மதியம் 12.40 மணி, மாலை 04.40 மணி, மாலை 06 மணி மற்றும் இரவு 09 மணிக்கு அனுராதபுரத்துக்கு விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அனுராதபுரத்திலிருந்து கொழும்பிற்கு
குறித்த காலப்பகுதியில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப அனுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri