கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பெருமளவு மக்கள் கூட்டம் (Video)
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்தில் பெருமளவான மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதன் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நீண்ட வார இறுதி விடுமுறை
நீண்ட வார இறுதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் சொந்த இடங்களுக்கும், நகர்ப்புற மக்கள் விடுமுறையைக் கழிக்கவும் தூரப் பிரதேசங்களுக்குச் செல்வதற்காக கோட்டை புகையிரத நிலையத்தில் அலைமோதிக் கொண்டுள்ளனர்.
இன்று காலை எட்டரை மணியளவில் புறப்பட்ட பதுளை புகையிரதம் கோட்டை புகையிரத நிலையத்திலேயே மக்கள் கூட்டத்தினால் நிரம்பி வழிந்துள்ளது.
அதன் காரணமாக ஏராளமானோர் புகையிரதத்தில் ஏறிக்கொள்ள முடியாமல் போன நிலையில் புகையிரத நிலைய அதிபரை சந்தித்து தங்கள் பயணச்சீட்டுகளின் கட்டணத்தை மீளத் தருமாறு வற்புறுத்தியதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பெருமளவு மக்கள் கூட்டம்
அதேபோன்று மாத்தறை புகையிரதத்திற்கான பயணச்சீட்டை பெற்றுக் கொண்டவர்களிலும் பெருந்தொகையானோருக்கு புகையிரதத்தில் ஏறிக் கொள்ள முடித நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமான மக்கள் கூட்டத்தை விட சுமார் ஐந்து மடங்கு அளவிலான மக்கள் கூட்டம் இன்று புகையிரத நிலையத்தில் நிரம்பி வழிவதாக தெரியவந்துள்ளது.
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam