இலங்கையின் நாடாளுமன்றப் பணியாளர்களுக்கு இஸ்ரேலில் விசேட பயிற்சிகள்
இலங்கையின் நாடாளுமன்றப் பணியாளர்களுக்கு இஸ்ரேலில் விசேட பயிற்சிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் இலங்கையின் நாடாளுமன்றப் பணியாளர்கள் தொகுதி வாரியாக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டு குறுகிய காலத்தில் விசேட பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளார்கள்.
இஸ்ரேல் - இலங்கை நட்புறவுச் சங்கத்தின்
வெகுவிரைவில் இது தொடர்பான இருதரப்பு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இலங்கை - இஸ்ரேல் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்தச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த பயிற்சிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்ற இஸ்ரேல் - இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டத்தின்போது இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் போது இஸ்ரேல்-.இலங்கை நட்புறவுச் சங்கத்தின் தலைவர் Tsega Melaku மற்றும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 21 மணி நேரம் முன்

496 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த உலகின் அதிவேக கார்! ஜேர்மனியில் பறந்த காட்சிகள் வைரல் News Lankasri
