விசேட தொடருந்து சேவைகள் ஏற்பாடு: வெளியான அறிவிப்பு
நீண்ட வார விடுமுறை மற்றும் பொதுத் தேர்தலையடுத்து மக்களின் கொழும்புக்குத் (Colombo) திரும்பும் பயணத்தை இலகுவாக்கும் வகையில் விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் திங்கள் (18) மற்றும் செவ்வாய் (19) ஆகிய இரு தினங்களில் விசேட தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த நாட்களில் வழக்கமாக திட்டமிடப்பட்ட சேவைகளுடன் கூடுதலாக தொடருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தொடருந்து சேவைகள்
இந்தநிலையில், கொழும்பு கோட்டை மற்றும் பதுளை, கண்டி மற்றும் கொழும்பு கோட்டை, பெலியத்த மற்றும் கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை மற்றும் ஹிக்கடுவ, மாத்தறை மற்றும் கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இந்த சேவைகள் இடம்பெறும்.
மேலும், சமுத்திரா தேவி தொடருந்து மாத்தறை தொடருந்து நிலையத்தில் இருந்து அதிகாலை 3:50 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஏனைய அலுவலக தொடருந்துகள் திட்டமிட்டபடி இயக்கப்படும் என்றும் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |