நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
2000 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் அறவிடப்படும் 25 வீத மேலதிக வரி ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்களிடம் அறவிடப்படமாட்டாது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் நிதி அமைச்சர் நீண்ட விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வருடாந்தம் 2000 மில்லியன் வருமானம் பெருவோருக்கு மட்டுமே 25 வீத ஒரு நேர வரி அறவிடப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“2022 வரவு செலவு திட்ட யோசனையை சமர்ப்பித்து என்னால் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு திட்ட உரையின் 68வது பக்க 7.9 இல் ஒரு முறை மாத்திரம் அறவிடப்படும் வரி யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.
அதில் 2000 மில்லியனை விட அதிக வரி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்களின் மீது சுமத்தப்படும் 25 சதவீத மிகை வரி குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரி ஊடாக சுமார் 100 பில்லியன் ரூபாயினை ஈட்ட எதிர்ப்பார்த்துள்ளோம். இவ்வாறுதான் 68ம் பக்கத்தில் உள்ளது. அதன்படி, 69 பேரை இனங்கண்டிருந்தோம். இவர்களிடம் இருந்து 105 பில்லியன் வரி வருமானம் கிடைக்கும்.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்களை இதில் உள்ளடக்க நாம் எப்போதும் எதிர்ப்பார்க்கவில்லை. அதை நாங்கள் திட்டமிடவே இல்லை.
எனினும் கடந்த அரசாங்கத்தின் 2017 இலக்கம் 24 உள்நாட்டு வருமான சட்டத்தில் இந்த 11 நிதியங்களும் வரி அறிவிட வேண்டிய நிறுவனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த மிகை வரிக்கு குறித்த நிதியங்களும் உள்ளடங்கும் என பொது மக்கள் மத்தியில் கருத்து பரவியுள்ளது. இதனை நாம் அமைச்சரவையில் விளக்கப்படுத்தி குறித்த 11 நிதியங்களையும் இந்த வரியில் இருந்து விடுவிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
