நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க வழங்கவுள்ள செய்தி!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
இந்த விசேட உரையை எதிர்வரும் 6 ஆம் திகதி நிகழ்த்தவுள்ளார்.
விசேட உரை
ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது நிதியை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதி
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி இரவு, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து 23 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று வரை சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று(29.08.2025) வீடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி ரணில் எதிர்வரும் 6 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 3 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam
