உக்ரைன் நாட்டின் பயனர்களுக்கு கூகுள் நிறுவனம் வழங்கவுள்ள சிறப்பு சேவை
உக்ரைன் நாட்டில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வான்வெளி தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை வழங்கும் சேவையைக் கூகுள் நிறுவனம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 17ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், உக்ரைன் நாட்டு மக்களுக்கு உதவும் வகையில், பதிவேற்றம் ஒன்றைக் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அந்நிறுவனம், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அரசின் வான்வெளி தாக்குதல் குறித்த சைரன்களை நம்பியே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதால், உக்ரைன் அரசுடன் இணைந்து இந்த சேவையைத் தொடங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பூகம்பங்கள் குறித்த எச்சரிக்கைகளுக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் மூலம் வான்வெளி தாக்குதல் எச்சரிகைகளை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan