மாத்தறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு
மாத்தறை (Matara) மாவட்டத்தில் நாளையதினம் (25) உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இதற்கமைய, சீரற்ற காலநிலையால் ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் நாளை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வெள்ள நிலைமை நாளை தொடரும்பட்சத்தில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்குத் தேவையான கடற்படைப் படகுகள், உழவு இயந்திரங்கள் மற்றும் இராணுவ யூனிஃபர்கள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
அவசர அழைப்புக்கள்
அத்துடன் பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் படகுகள் மற்றும் உழவு இயந்திரங்களை தேவைக்கேற்ப பயன்படுத்த தயாராக உள்ளன.
அதேவேளை, அவசர சூழ்நிலையில் பரீட்சைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டால் 24 மணிநேர சேவையில் உள்ள தொலைபேசி இலக்கமான 0412 234 134க்கு அழைப்பினை ஏற்படுத்தி தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நேற்று (23) இரவு முதல் இன்று (24) மாலை 4:00 மணி வரையில் மாத்தறை மாவட்டத்தின் எந்தவொரு பிரதேசத்திலும் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையுடன் மாத்தறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட சிறு வெள்ளப்பெருக்கு நிலைமை படிப்படியாக குறைந்து வருவதாக மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
