மேல் மாகாண பாடசாலைகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை
மேல் மாகாணம் உட்பட நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் ஐஸ் போதைப்பொருள் பகிரப்படுவதை தடுக்கும் வகையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி, பாதுகாப்பு மற்றும் பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான அமைச்சர்கள் உட்பட பாதுகாப்பு திணைக்கள தலைவர்களின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாட்டிற்கமைய, பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், சிவில் பாதுகாப்பு குழுக்கள், பாடசாலை மாணவர் தலைவர்கள் மற்றும் பெற்றோர்களும் இதற்காக உள்வாங்கப்பட உள்ளனர்.
அதன் மூலம் தகவல் பெறப்பட்டு, பொலிஸார் கூட்டு நடவடிக்கை மூலம் விசாரித்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.