கொழும்பு வருகை தரும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
கொழும்பில் புத்தாண்டை முன்னிட்ட நாளை விசேட போக்குவரத்து திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களின் நன்மை கருதி இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு நகருக்கு வெளியில் இருந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக பெருந்தொகையான மக்களும் வாகனங்களும் நாளை காலி முகத்திடல் பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
பாரிய வாகன நெரிசல்
அதற்கமைய கொழும்பு நகரை மையமாகக் கொண்ட புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்படக்கூடும்.

அதனை சமாளிக்கும் வகையில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வாகன தரிப்பிடம்
அதன்படி, நாளை காலி மத்திய வீதியில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாகனங்களும் கொழும்பின் முக்கிய பகுதிகளிலுள்ள பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள இலவச வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளன.
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam