நாடளாவிய ரீதியில் விசேட சோதனை! வெளியான காரணம்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 25ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
விசேட சோதனை
பண்டிகைக் காலத்தில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதியையும் சிக்கல்களையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், பண்டிகைக் காலத்தில் சந்தையில் மனித பாவனைக்கு உதவாக உணவுப் பொருட்களின் விற்பனையை தடுக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதிகள் மற்றும் சிக்கல்களைத் தவிர்க்கவும், முக்கிய மொத்த விற்பனை கடைகள் மற்றும் களஞ்சியசாலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
