நிதி ஒதுக்கீட்டு பற்றாக்குறைக்கு உள்ளாகியுள்ள மருத்துவ சேவையின் விசேட திட்டம்
மருத்துவ சேவையை சரியான நேரத்தில் அணுகுவதில் விரைவாகவுள்ள சுவசெரிய திட்டம் (Suwa Seriya) தற்போது நிதி ஒதுக்கீட்டு பற்றாக்குறைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சேவையின் மூலம் விரைவான மற்றும் இலவச நோயாளர் காவு வண்டி என்ற விசேட திட்டம் மூலம் விசேட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் இந்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட இந்த அவசர வாகன சேவை பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் அதிநவீன உபகரணங்களை ஏற்றிச் செல்வதற்கும் மருத்துவ அவசர நிலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நிதி ஆதாரங்கள்
இந்தநிலையில் இந்திய அரசின் நிதியுதவி முடிவடைந்த பின்னர், இந்த சேவை குறிப்பிடத்தக்க நிதி இடைவெளியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தாராளமான மானியத்துடன் 2016இல் ஆரம்பிக்கப்பட்ட குறித்த சேவை, ஒரு வருடத்தின் பின்னர் அதன் செயற்பாடுகள் மற்றும் பராமரிப்புக்கான பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கும் என்ற ஆரம்ப ஒப்பந்தத்தின் கீழ் இயங்கியுள்ளது.
எனினும், தற்போது நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த சேவைக்கான மாற்று நிதி ஆதாரங்களை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் குறித்த இந்திய திட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) மற்றும் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் போன்றோர் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |