நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 361 பேர் கைது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 361 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக் கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (23) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட சுற்றிவளைப்பு
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 111 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 167 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 82 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 122 கிராம் 447 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 168 கிராம் 513 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 154 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 300 சட்டவிரோத சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
