நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது!
நாடளாவிய ரீதியில் நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 353 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 102 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 143 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 100 பேரும், கஞ்சா செடிகளுடன் 04 பேரும் போதை மாத்திரைகளுடன் 04 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 186 கிராம் 353 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 337 கிராம் 226 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 10 கிலோ 470 கிராம் 380 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 162 போதை மாத்திரைகள், 25367 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
