தயவு செய்து இதனை செய்யாதீர்கள்! இலங்கை மக்களிடம் அரசு வலியுறுத்தல்
நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது என்பது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்படும் காலங்களில் மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துமாறு இலங்கை நிலையான வளசக்தி அதிகாரசபை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
மின்சார பயன்பாடு அதிகமாக உள்ள மாலை 6.30 - 9.30 மணி வரையான காலப்பகுதியில் மின்சார உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சலவை இயந்திரங்கள், நீர் மோட்டர் போன்ற அத்தியாவசியமற்ற இயந்திரங்களை இந்த காலப்பகுதியில் பயன்படுத்த வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிக திறன் கொண்ட பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம்.
மின்சார உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் உபகரணங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய குடும்பத்திற்கு ஒரு கதவு கொண்ட குளிர்சாதணை பொட்டி ஒன்று போதுமானதாகும். இதனால் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கும் பொருட்களை முடிந்த அளவு கொள்வனவு செய்யுமாறு பொது மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.