இமாலய பிரகடனம் தொடர்பில் சுவிஸ் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஒற்றையாட்சியை ஊக்குவிக்கும் ஹிமாலய பிரகடனத்தை ஆதரிப்பதற்குப் பதிலாக, இலங்கையில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்குமாறு சுவிஸ் ஜனாதிபதி வயோலா அம்ஹெர்டிடம் இலங்கையில் காணாமல்போன தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இமாலயப் பிரகடனம் காலாவதியான மற்றும் யதார்த்தமற்ற கருத்தாகும், இது பல தசாப்தங்களாக ஒடுக்குமுறை, பாகுபாடு மற்றும் இனப்படுகொலைகளால் சிங்கள மேலாதிக்கத்தின் கைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிலாசைகளையும் குறைகளையும் புறக்கணிக்கிறது என்று காணாமல்போன தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் குழு தெரிவித்துள்ளது.
இந்த குழுவின் பேச்சாளர் ஜி.ராஜ்குமார் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

தமிழர்களுக்கு தொடரும் ஆபத்து
தமிழர்கள் ஒற்றையாட்சியில் சிங்களவர்களுடன் சகவாழ்வு வாழ்வதை, அவர்களின் உயிர்வாழ்வதற்கான குறிப்பிடத்தக்க ஆபத்தாகவே கருதுகின்றனர் என்றும், அதனை ஓநாய்களிடையே வாழும் கோழிகளுக்கு அவர் ஒப்பிட்டுள்ளார்
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட
சுயநிர்ணய உரிமைக்கான சட்டபூர்வமான மற்றும் சட்டப்பூர்வ உரிமை தமிழர்களுக்கு
உள்ளது.
இந்த நிலையில், வரலாற்றுத் தாயகம், பொதுவான மொழி, தனித்துவமான கலாசாரம்,
கூட்டுப் போராட்டம் என தனித்துவமிக்க தேசமாகத் திகழும் தமிழர்களின் அரசியல்
எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஜனநாயக மற்றும் அமைதியான ஒரே வழி பொது
வாக்கெடுப்பு மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களிடமும், போரினால் இடம்பெயர்ந்தவர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த சுவிஸ் வளங்களை ஒதுக்குமாறு சுவிட்சர்லாந்து ஜனாதிபதியை கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
முன்னதாக பௌத்த பிக்குமாரும், உலக தமிழர் பேரவையும் இணைந்து தயாரித்த இமாலய பிரகடனத்துக்கு சுவிஸ் அரசாங்கம் நிதியளித்ததாக வெளியான தகவலை அடுத்தே காணாமல் போன பிள்ளைகளின் தாய்மார் அமைப்பு சுவிஸ் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
தமிழர்களின் உள்விவகாரங்களில் சுவிஸ் அரசு தலையிடக் கூடாது, தமிழர் நலனைக் குழிதோண்டிப் புதைக்கும் எந்த முயற்சியையும் ஆதரிக்கக் கூடாது.
மாறாக, சுவிஸ் அரசு தமிழர்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்து அவர்களின் ஜனநாயகத் தேர்வுக்கு ஆதரவளிக்கும் தார்மீகக் கடமை சுவிஸ்டர்லாந்து ஜனாதிபதிக்கு இருப்பதாக ராஜ்குமார் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam