ஊடகவியலாளர்களை அபிவிருத்திப் பணிகளின் பங்குதாரர்களாக கோரும் ஜனாதிபதி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருணாகல் வரையிலான பகுதி அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இந்த நாட்டை கட்டியெழுப்புவே நாம் வந்துள்ளோம். அவ்வாறெனில் நான் ஊடகவியலாளர்களிடம் கோருகின்றேன், நீங்கள் இந்த அபிவிருத்திப் பணிகளின் பங்குதாரர்களாக மாறுங்கள். அதுதான் தேவை.
விமர்சனங்களைச் செய்து மக்களை அதைரியமூட்ட வேண்டாம். ஊடகவியலாளர்கள் நேர்மறையாக சிந்திக்க வேண்டும். அன்று முடிவுக்கு கொண்டு வர முடியாது என கூறப்பட்ட போரை நாம் முடிவுறுத்தினோம்.
அதேவிதமாக நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam