நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட முக்கிய அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது நோயின் போது தன்னை கவனித்துக் கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
நாடு முழுவதும் மத அனுசரிப்பு
தனது நோய் வெளிப்படுத்தப்பட்டதிலிருந்து, அவரது நலம் விசாரித்தும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்தியும் பெறப்பட்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. நல்ல ஆரோக்கியத்தின் பெயரில் நாடு முழுவதும் மத அனுசரிப்புகளை நடத்த நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளை நான் குறிப்பாகப் பாராட்டுகிறேன்.

இலங்கை குடிமக்களாகிய நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள், நான் விரைவாக குணமடைய பெரும் தைரியத்தை அளித்துள்ளன.
குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள், தங்களால் இயன்றவரை எனக்காக உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்பதை நான் அறிவேன். என் மீது நீங்கள் காட்டிய அக்கறைக்கும் கவனத்திற்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
திடீரென நுழைந்த ஆயுததாரி! சரமாரியான துப்பாக்கிச்சூட்டை நடத்திய பாதுகாப்பு படை - டிரம்ப் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்