மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் எரிசக்தி அமைச்சின் விசேட அறிக்கை
முன்மொழியப்பட்டுள்ள புதிய மின்சாரக் கட்டணம் தொடர்பில் எரிசக்தி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, புதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்தை நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களின் கீழ் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு குறித்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று(17.01.2025) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 20 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம்
அதற்கமைய, வீட்டுப் பிரிவிற்கான மின்சாரக் கட்டணம் 20 சதவீதத்தாலும் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் 21 சதவீதத்தாலும் குறைக்கப்படவுள்ளது.
வீட்டுப்பாவனையின் போதான, 0 – 30 அலகுகளுக்கு 29 வீதமும், 31 – 60 அலகுகளுக்கு 28 வீதமும், 61 – 90 அலகுகளுக்கு 19 வீதமும், 91 – 180 அலகுகளுக்கு 18 வீதமும், 180 அலகுகளுக்கு மேல் 19 வீதமும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உணவகங்களுக்கு 31 சதவீதமும், தொழில்துறைக்கு 30 சதவீதமும் மற்றும் பொது நோக்கத்திற்கான மின்சாரக் கட்டணங்களை 12 சதவீதமாக குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரச நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் 11 சதவீதத்தாலும் தெரு விளக்குகளுக்கான கட்டணம் 11 சதவீதத்தாலும் குறைக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
