வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விசேட செயற்றிட்டம் முன்னெடுப்பு
வவுனியா மாவட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பல இடங்களில் இன்றைய தினம் (03.02.2024) குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் இராணுவத்தினர், பொலிஸார், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

விசேட சிரமதான பணிகள்
வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல், அதே நேரம் நுளம்பு பெருக்கத்திற்குச் சூழல் காணப்படும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை அடையாளப்படுத்தும் முகமாகச் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு ஒழிப்பு செயலணி உத்தியோகத்தர்கள், பாதுகாப்புத் துறையினர் விசேட கள விஜய செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளனர்.
அதே நேரம் வவுனியா வவுனியா நகர மத்திய பகுதிகளைச் சூழ உள்ள பகுதிகள் இராணுவத்தினரின் உதவியுடன் விசேட சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டமையுடன் நகரசபையின் உதவியுடன் குப்பைகளும் அகற்றப்பட்டன.
அத்துடன் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 34 நிமிடங்கள் முன்
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam