மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய விசேட யாக பூஜை
மட்டக்களப்பு (Batticaloa) - வந்தாறுமூலை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தின் விசேட யாக பூஜையும் 1008 சங்காபிஷேகம் மற்றும் அபிஷேகத்துடன் கூடிய வசந்த மண்டப பூஜையும் நடைபெற்றுள்ளன.
மகா கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவை முன்னிட்டு வருஷாபிஷேக மணவாள கோல விழாவும் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கணபதி ஹோமம் யாக பூஜை வழிபாடுகள் நடைப்பெற்றதுடன் பூர்ண கும்பம் எழுந்தருளச் செய்தலுடன் 1008 சங்காபிஷேக பூஜையும் நடைபெற்றுள்ளது.
விசேட யாக பூஜை
இதன்பின்னர், வசந்த மண்டப பூஜையும் சுவாமி உள்வீதி உலாவருதலும் இடம்பெற்றுள்ளதுடன், பூஜை நிகழ்வுகளில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, மாதவா, மதுசுதனா, நாராயணா, என்ற இறைவன் நாமங்களுடன் மகா விஷ்ணுப் பெருமானை வேண்டி வழிபாடு செய்துள்ளனர்.
மேலும் இந்த வருஷாபிஷேக 1008 சங்காபிஷேக பூஜை நிகழ்வுகளை சப்தரிஷி குருபீட சாகித்திய பாஸ்கர் குமார விக்னேஸ்வர குருக்களுடைய தலைமையிலான குருமார் மேற்கொண்டுள்ளனர்.







மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
